Skip to main content

மூன்றாம் மனிதரின் தலையீடு; வீணாய்ப் போன இளம் ஜோடியின் வாழ்க்கை - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 58

Published on 25/07/2024 | Edited on 25/07/2024
Advocate santhakumaris valakku en 58

குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.

மூர்த்தி என்பவருடைய வழக்கு இது. பெற்றோர் வரன் பார்த்து பெண்ணை பிடித்து போக திருமணம் உறுதி ஆகிறது. பையன் வீட்டில் பெண்ணிற்கு நகையெல்லாம் போட்டு திருமணம் பின்பு தான் தெரிகிறது, பெண் அவளது பாட்டியும், அம்மாவும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவள் என்று. திருமணம் முடிந்து மனைவியை வெளியே கூட்டி சென்றால் பாட்டி தொடர்பு கொண்டு வீட்டிற்கு வருவதே இல்லை என்று பேசுவது, அடிக்கடி ஏன் கூட்டி செல்கிறாய் என்று கேள்வி கேட்பது, மாப்பிள்ளை என்று  கூட பார்க்காமல் அவருக்கு உரிய மரியாதை இல்லாமல் பேசுவது என்று இருப்பது இவருக்கு நெருடலாக இருக்கிறது. அந்த பெண்ணை வீட்டிற்கு கூப்பிட்டால் கூட பாட்டி கூட கொஞ்ச நாள் கழித்து வருகிறேன் என்று அங்கேயே தங்குகிறாள். திரும்பவும் அனுப்புவதில்லை. 

ஒருவேளை அந்த பெண்ணை, தன் வீட்டிற்கு அழைத்து வந்தால் அடுத்த ஆறு நாட்களில் அவளது அம்மா வந்து பார்க்க வருகிறார். இதெல்லாம் பையன் வீட்டில் வித்தியாசமாக உணர்கிறார்கள். பெண்ணும் ஒரு சிறு பிள்ளை தனமாக இருக்கிறாள். பையன் அன்பாக வைத்து கொண்டாலும் தன்னுடைய அம்மா, பாட்டியை பார்த்தால் மனம் மாறி விடுகிறாள். தீபாவளிக்கு பெண் வீட்டிற்கு சென்ற போது அவர்கள் அரை பவுன் காசு மாப்பிள்ளைக்கு போடுகிறார்கள். இவர் விளையாட்டாக மோதிரம் போட்டிருந்தால் தனக்கு பயனுள்ளதாக இருக்குமே என்று கூற அதை உடனடியாக தவறாக எடுத்து கொண்டு வரதட்சணை புகாரளிப்பேன் என்று பெண்ணின் பாட்டி கடினமாக பேசுகிறார்.  விளையாட்டாக சொன்னதாக எடுத்து சொல்லி காயினை திருப்பி கொடுத்ததும் அவர்கள் இதை சுலபமாக எடுத்து கொள்ளவில்லை. மாப்பிள்ளை தங்களை அவமானப்படுத்துகிறார் என்று பெண்ணின் பெற்றோர் கூறியதையடுத்து, அந்த தங்க காயினை திரும்ப வாங்கிக்கொள்கிறார் மூர்த்தி. இது போலவே பெண் வீட்டில் பாதி நாட்கள் இங்கே கணவனிடம் மீதி நாட்கள் என்று கழிய பொறுக்காத பையனின் பெற்றோர், பெண் வீட்டிற்கு சென்று பேசி விடலாம் என்று செல்கிறார்கள்.

பொறுமையாக எடுத்து சொல்லி பையனும் பெண்ணும் புரிந்து கொஞ்ச நாள் வாழட்டும் என்று பேசி பார்க்கிறார்கள். மாமியாரும் மருமகளை மகளாக ஆசையாக வைத்து கொள்கிறார். அந்த பெண்ணிற்கும் தன் அத்தையை பிடித்து போகிறது. தனது மாமியாரை பற்றி கவிதையெல்லாம் எழுதி கொடுக்கிறாள். ஆனால் பெண்ணின் தாயாரும் பாட்டியும் பெண் தன் கையை விட்டு போவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் குறுக்கிட்டு கொண்டே இருக்கிறார்கள். இவளை கணவனுடன் வாழவே விடுவதில்லை. பொறுக்காத பையனின் தந்தை, பாட்டியிடம் கொஞ்சம் கோபமாக பேசி விட அடுத்த நாள் பையன் வீட்டின் மீது போலீசில் வரதட்சனை புகார் கொடுக்கப்பட்டு அழைப்பு வருகிறது. பையன் மீது தவறில்லை என்று போலீசுக்கு புரிகிறது. ஆனாலும் பெண்ணின் ஒத்துழைப்பு இல்லாததால் அவளை பாட்டியுடன் அனுப்பி விடுகின்றனர். தாங்களே இருபத்தைந்து பவுன் போட்டு மருமகளை கூட்டி வந்துவிட்டு நாங்கள் ஏன் வரதட்சணை கொடுமை செய்ய போகிறோம் என்று சங்கடப்பட்டு டௌரி ப்ரொவிஷனரி ஆபீசர் வரை போகிறது. பெண்ணை அவர்களே வைத்து கொள்ளட்டும் இனி அங்கு செல்ல வேண்டாம் என்று பெற்றோர் முடிவெடுத்தாலும் பையனால் பெண்ணை விட முடியவில்லை. 

சில நாட்கள் கழித்து பெண், மூர்த்ர்தியைஅழைத்த பின்னர் அவளை பார்த்து கூட்டி வர வீட்டிற்கு சென்றபோது பாட்டியிடமும் தன் அம்மாவிடமும் மன்னிப்பு கேளுங்கள் என்று அந்த பெண் கெஞ்சி கோரிக்கை விடுக்க மூர்த்தியும் வேறு வழியில்லாமல் மன்னிப்பு கேட்டு  கூட்டி வந்து விடுகிறார். டௌரி ப்ரொவிஷனரி ஆபீசரிடம் விசாரணையின் போது இவர்கள் வெளியே சுற்றிய புகைப்படம் காட்டி நாங்கள் சந்தோஷமாக தான் இருக்கிறோம் என்று எடுத்து சொல்லி வேறு யாரோ தான் தன் மனைவியை மனம் மாற்றி விடுகிறார்கள் என்று சொல்ல பெண்ணோ விடாமல் மாமியாரும் கணவனும் தான் மோதிரம் கேட்டு கொடுமை செய்தார்கள் என்று சொல்கிறாள். ஆனால் தன் அத்தை ஆசையாக இருப்பதையும்  சொல்கிறாள். அந்த அலுவலருக்கு புரிந்து பெண்ணின் பெற்றோரையும் பாட்டியும் அழைத்து அவர்களை வாழ விடுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்து பெண்ணிற்கும் அறிவுரை கூறி அனுப்பி வைக்கிறார். ஆனால் ஒன்றும் ஒத்து வரவில்லை. இரு குடும்பத்தையும் கூப்பிட்டு பஞ்சாயத்து வைத்து பெண் கூப்பிட்டும் வருவதில்லை என்றால் விட்டு விடுங்கள் என்று அவர்கள் பக்கம் கூற பையன் வீட்டில் தங்கள் மீது போட்ட வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்று கேட்க அதன்படி நடந்தது. பெண்ணும் தன் பெற்றோர் பாட்டி கூடவே இருந்து கொள்கிறேன் என்று உறுதியாக சொல்லிவிடுகிறாள். இருவரும் மியூசிச்சுவல் கன்செண்ட் போட்டு விவாகரத்து இறுதியாக வழங்கப்பட்டது.

சார்ந்த செய்திகள்