Skip to main content

அசிங்கமான பழக்கம் கொண்ட கணவன்; மனைவி எடுத்த முடிவு - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு : 23

Published on 26/06/2023 | Edited on 26/06/2023

 

Advocate Santhakumari's Valakku En - 23

 

தான் சந்தித்த ஒரு வழக்கு குறித்து நம்மிடம் குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி விவரிக்கிறார்.

 

தமிழ்நாட்டில் பிறந்து மும்பையில் வளர்ந்த பெண் மீனாட்சி. அந்தப் பெண்ணை விமானத்தில் நான் சந்தித்தேன். நான் ஒரு வழக்கறிஞர் என்பதை அறிந்ததும் அந்தப் பெண் தன்னுடைய பிரச்சனையை என்னிடம் கூற முற்பட்டாள். சில மாதங்கள் கழித்து என்னை சந்தித்து பிரச்சனையை விளக்கினாள். தன்னுடைய கணவர் மனநிலை சரியில்லாதவர் என்பதை திருமணத்தின்போது தான் அறியவில்லை என்று அவள் கூறினாள். நல்ல பையன், சொத்து நிறைய இருக்கிறது என்று பெற்றோர் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். 

 

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு காபி குடிக்க வெளியே அழைத்தபோது அவன் வர மறுத்தான். போனிலும் அவளோடு அவன் சரியாகப் பேசவில்லை. திருமணமும் நடந்தது. திருமணத்தின்போதும் அவன் இறுக்கமாகவே இருந்தான். முதலிரவின்போது அவன் தூங்கிவிட்டான். மறுநாள் காலை ஒரு மணி நேரம் குளித்தான். பொதுவாகவே அவன் அசுத்தமாக இருந்தான். கழிவறை சென்றாலும் அசுத்தமாகவே அவன் வெளியே வந்தான். அவற்றை மனைவியை சுத்தம் செய்யச் சொன்னான். ஒரு மனநோயாளி போல் அவன் நடந்துகொண்டான். பெற்றோரிடம் நடந்த அனைத்தையும் அவள் கூறினாள். 

 

அவனுடைய தாய் அவனைக் கண்டித்த பிறகு அவளோடு உறவுகொள்ள அவன் முயன்றான். அவன் உடலில் இருந்து வந்த நாற்றத்தால் அவளால் அவனோடு உறவுகொள்ள முடியவில்லை. இந்த மனரீதியான கொடுமைக்கு வழக்கு தொடுக்க முடியுமா என்று அந்தப் பெண் என்னிடம் கேட்டாள். அவனை மனநல ஆலோசகரிடம் அழைத்துச் செல்லுமாறு நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் அவன் அங்கு வர மறுத்தான். நீதிமன்றத்திலேயே இருந்த மனநல ஆலோசகரிடம் அவன் அழைத்துச் செல்லப்பட்டான். அவனிடம் தவறு இருப்பது அங்கு தெரிந்தது. 

 

அவனோடு வாழ்வது பிணத்தோடு வாழ்வதற்கு சமம் என்று அந்தப் பெண் கூறினாள். அதன் பிறகு அந்தப் பெண்ணுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. இப்போது அவள் நிம்மதியாக இருக்கிறாள். அவள் ஒரு படித்த, தைரியமான பெண். இப்போதும் அந்தப் பெண் என்னோடு தொடர்பில் இருக்கிறாள்.

 

 

சார்ந்த செய்திகள்