Skip to main content

உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணி இங்கிலாந்து! - பின்ச் புகழாரம்

Published on 22/06/2018 | Edited on 22/06/2018

இங்கிலாந்து அணி தனிச்சிறப்புடன் விளையாடுவதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பெருமைப்படுத்தியுள்ளார்.
 

finch

 

 

 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கெனவே, 3 - 0 என்ற கணக்கில் இந்தத் தொடரை வென்றுள்ள இங்கிலாந்து அணியுடன் நான்காவது போட்டியில் களமிறங்கியது ஆஸி. அணி. செஸ்டர் லி ஸ்ட்ரீட் மைதானத்தில் வைத்து நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, மிகச்சிறப்பாக ஆடி 310 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் சார்பில் ஆரோன் பின்ச் மற்றும் ஷான் மார்ஸ் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
 

 

 

ஆனால், மீண்டு வந்த ஆஸி அணியின் ஆட்டத்தை பொலிவிழக்கச் செய்யும் விதமாக, இங்கிலாந்து அணி அசத்தலாக ஆடி வெறும் 44 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியின் சார்பில் ஜேசன் ராய் சதமடித்தார். இதன்மூலம் 4 - 0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. இன்னும் ஒரேயொரு போட்டி மட்டுமே மீதமுள்ள நிலையில், ஒயிட் வாஷ் செய்யப்படுவதைத் தடுக்க ஆஸி அணி முயற்சி செய்யும் என எதிர்பார்க்கலாம். 
 

இந்தத் தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச், ‘இங்கிலாந்து அணி தனக்கென ஒரு பென்ச்மார்க் ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறது. உலகின் நம்பர் ஒன் அணி என்பதை இங்கிலாந்து அணி நிரூபித்துவிட்டது. அந்த அணியிடம் இருக்கும் நம்பிக்கையும், சக்திவாய்ந்த பேட்டிங் லைன்அப்பும் வியக்க வைக்கிறது. ஒருவேளை தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினால் கூட, கடைசி பேட்ஸ்மென் வரை விளையாடி வெல்லும் தகுதியும், பலமும் அந்த அணிக்கு இருக்கிறது’ என பேசியுள்ளார்.