Published on 12/11/2020 | Edited on 12/11/2020

அமீரகத்தில் நடைபெற்ற 13-ஆவது ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரரான நடராஜன், ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இதனையடுத்து, அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் இளம் வீரரான வாஷிங்டன் சுந்தர், நடராஜனை உற்சாகப்படுத்தும் வகையில் நடிகர் ரஜினியின் பாடலைப் பாடி ஒரு காணொளி வெளியிட்டுள்ளார்.
தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில், ரஜினி நடிப்பில் வெளியான 'படையப்பா' படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான 'வெற்றிக்கொடி கட்டு' பாடலின் வரிகளைப் பாடி, 'கடின உழைப்புக்கு மாற்று ஏதுமில்லை' எனக் குறிப்பிட்டுள்ளார்.
There is no subsitute for Hardwork.? @Natarajan_91 ?? pic.twitter.com/nDAMfLu6AM
— Washington Sundar (@Sundarwashi5) November 11, 2020