விராட் கோலியை சச்சின், டிராவிட் ஆகியோருடன் ஒப்பிட முடியாது: பாக்., வீரர் முகமது யூசுப்
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியை சச்சின், டிராவிட் ஆகியோருடன் ஒப்பிட முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது யூசுப் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் விளையாடும் போது இந்திய அணியில் சச்சின், ராகுல் டிராவிட் மற்றும் வி.வி.எஸ். லக்ஷ்மண் போன்ற ஜாம்பவான்களிடமிருந்து அதிக பாடம் கற்றுக் கொண்டதாக தெரிவித்தார். கேப்டன் விராட் கோலி நல்ல பேட்ஸ்மேன் என்று கூறிய அவர், ஆயினும் சச்சின், டிராவிட் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் கோலியை ஒப்பிட முடியாது என்று கூறினார்.