Skip to main content

தடையை மீறி அனுஷ்காவுடன் ஷாப்பிங் சென்ற கோலி!

Published on 31/07/2018 | Edited on 31/07/2018
Virat

 

 

 

டெஸ்ட் தொடர் நெருங்கிவரும் நிலையில் வீரர்கள் தங்கள் குடும்பத்தாருடன் நேரம் செலவிடுவதைத் தவிர்க்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நிலையில், இந்திய கேப்டன் விராத் கோலி தனது மனைவியுடன் ஷாப்பிங் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. 
 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, நாளை முதல் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கவுள்ளது. ஏற்கெனவே இங்கிலாந்துடன் மோதிய டி20 தொடரில் வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரை இழந்தது. இந்நிலையில், டெஸ்ட் தொடரை கண்டிப்பாக வென்றாக வேண்டும் என்ற நோக்கில், பிசிசிஐ சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் நடக்கும்போதும், டெஸ்ட் தொடருக்கு முன்பாகவும் வீரர்கள் தங்கள் மனைவி அல்லது தோழிகளுடன் வெளியில் சுற்றுவதைத் தவிர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.
 

இந்நிலையில், நாளை டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவுடன் இணைந்து ஷாப்பிங் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. நீல நிறத்தில் முகத்தை மறைக்கும்படியான ஆடை அணிந்திருக்கும் விராட் கோலிக்கு தெரியாமல் அவரை வீடியோ எடுத்த ரசிகர்கள், அதைப் பரப்பி வருகின்றனர். இந்த வீடியோ காட்சிகள் தொடர்பாக விராட் கோலி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்தாலும், இந்த வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டதுதானா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.