நான் டிவில்லியர்ஸாக இருந்திருக்கக்கூடாதா என்று ஆசைப்படுகிறேன் என பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
13-வது ஐபிஎல் தொடரின் 10-வது லீக் ஆட்டம் பெங்களூரு மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடந்தது. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களை குவித்தது. பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 55, தேவ்தத் படிக்கல் 54, ஆரோன் பின்ச் 52 ரன்கள் குவித்தனர். 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியும் 20 ஓவரின் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்ததால், போட்டி சமநிலையில் முடிந்தது. வெற்றியைத் தீர்மானிப்பதற்கு நடந்த சூப்பர் ஓவரில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது டிவில்லியர்ஸுக்கு வழங்கப்பட்டது.
டிவில்லியர்ஸின் அதிரடியான ஆட்டம் குறித்து பெங்களூரு அணியின் கேப்டனான விராட் கோலி பேசுகையில், "நான் டிவில்லியர்ஸாக இருக்கக்கூடாதா என்று ஆசைப்படுகிறேன். நீண்ட கால ஓய்விற்கு பிறகு அவர் கிரிக்கெட் விளையாடுகிறார். அவர் கிரிக்கெட் விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது. அவர் நிறைய கிரிக்கெட் பார்க்க மாட்டார். எல்லா விஷயங்களையும் எளிமையாக வைத்திருப்பார். அவரிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பதும் அதுதான்" என பேசினார்.