Skip to main content

U-17 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து சாம்பியன்

Published on 29/10/2017 | Edited on 29/10/2017
U-17 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து சாம்பியன்

இந்தியாவில் கடந்த 6-ந்தேதி 17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 
நடைபெற்றது. லீக், நாக்அவுட், காலிறுதி, அரையிறுதி ஆட்டங்கள் முடிவில் இங்கிலாந்து - ஸ்பெயின் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. கொல்கத்தாவில் இரவு 8 மணிக்கு தொடங்கிய இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சாம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்தின.

ஆட்டத்தின் தொடக்கதில் ஸ்பெயின் வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அந்த அணியின் செர்ஜியோ கோமஸ் 10-வது மற்றும் 31-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். இதனால் 2-0 என ஸ்பெயின் முன்னிலைப் பெற்றிருந்தது.

முதல் பாதி நேர ஆட்டம் முடியும் தருவாயில் 44-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் பிரேவ்ஸ்டர் ஒரு கோல் அடித்தார். இதனால் 2-1 என ஸ்பெயின் முன்னிலைப் பெற்றிருந்தது. ஆட்டத்தின் 2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும் இங்கிலாந்து வீரர்களின் ஆட்டத்தில் அனல் பறந்தது. அந்த அணியின் கிப்ஸ் ஒயிட் 58-வது நிமிடத்திலும், ஃபொடேன் 69-வது நிமிடத்திலும், குயெஹி 84-வது நிமிடத்திலும் கோல் அடிக்க இங்கிலாந்து 5-2 என முன்னிலைப் பெற்றது.

அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் இங்கிலாந்து 5-2 என வெற்றி பெற்று 17 வயதிற்குட்பட்டோருக்கான சாம்பியன் பட்டத்தை வென்றது.

சார்ந்த செய்திகள்