ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியின் 24வது லீக் ஆட்டம் இன்று (25ம் தேதி) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி மிட்சல் மார்ஷலும், டேவிட் வார்னரும் களமிறங்கினர். இந்த ஜோடி 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மிட்சல் மார்ஷல் 9 ரன்களில் அவுட் ஆனார். பிறகு ஸ்டீவன் ஸ்மித்துடன் இணை சேர்ந்த டேவிட் வார்னர் 93 பந்துகளில் 11 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 104 ரன்களை விளாசி தனது விக்கெட்டை இழந்தார். ஸ்டீவன் ஸ்மித் 68 பந்துகளில் ஒரு சிக்சர், 9 பவுண்டரிகளுடன் 71 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 399 ரன்களை அடித்தது.
ஆஸ்திரேலியா அணியில், டேவிட் வார்னர் 93 பந்துகளில் 11 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 104 ரன்கள், ஸ்டீவன் ஸ்மித் 68 பந்துகளில் ஒரு சிக்சர், 9 பவுண்டரிகளுடன் 71 ரன்கள், மேக்ஸ் வெல் 44 பந்துகளில் 8 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 106 ரன்களைக் குவித்தார்.
நெதர்லாந்து அணியில், லோகன் வான் பீக் 4 விக்கெட்களை வீழ்த்தினார். அதேபோல், பாஸ் டி லீடே 2 விக்கெட்களையும், ஆர்யன் டட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.