Published on 23/07/2021 | Edited on 23/07/2021
ஒலிம்பிக் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றுவரும் நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் இன்றுதொடங்கியுள்ளன.
ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில், அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடன் மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் முக்கிய அம்சமாக, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் நாடுகளின் வீரர்கள் தங்கள் நாட்டு தேசிய கொடியை ஏந்தி அணிவகுத்து சென்றனர்.
இந்த அணிவகுப்பில், குத்துசண்டை ஜாம்பவான் மேரிகோம், ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத்சிங் ஆகியோர் இந்திய தேசிய கொடியை ஏந்தியபடி, இந்திய அணியை தலைமை தாங்கி வழிநடத்தினர்.