நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியிடம், அவர் கேப்டனாக இருந்த போது நடந்த ஸ்லெட்ஜிங் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர் எனது காலத்தில் அணியில் எல்லாரும் ஜென்டில்மேனாக இருந்ததால் பெரிதாக ஸ்லெட்ஜிங் நடந்ததில்லை என கூறினார். மேலும் பேசிய அவர், "நான் கேப்டனாக இருந்த போது அணியில் இருந்த வீரர்களை வைத்து ஸ்லெட்ஜிங் செய்வது ரொம்ப கஷ்டம். டிராவிட்டிடம் சென்று "ஸ்லெட்ஜிங்" செய்யச் சொன்னால், அவர் என்னிடம், அய்யோ, அப்படியெல்லாம் செய்யக்கூடாது, அது தவறு என்று சொல்வார்.
வி.வி.எஸ்.லக்ஸ்மனிடம் சொன்னால், நான் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்லிவிடுவார். சச்சினிடம் ஸ்லெட்ஜிங் செய்ய சொன்னால், என்னால் முடியாது என்று கூறிவிட்டு, மிட் விக்கெட்டில் நிற்கும் பீல்டரிடம் சொல்லி ஸ்லெட்ஜிங் செய்ய சொல்லுங்கள் என கூறிவிட்டு சென்றுவிடுவார். இந்த விஷயத்தில் ஹர்பஜன் சிங் மட்டும்தான் எனது பேச்சை கேட்பார்" என கூறினார்.