இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக இருந்த சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஓப்போ நிறுவனத்தின் ஒப்பந்தம் நிறைவுக்கு வந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகாலமாக இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஸ்பான்சராக இருந்து வந்த ஓப்போ நிறுவனத்தின் ஒப்பந்தம் தற்போது முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடரில் இருந்து இந்திய ஜெர்சிகளில் ஓப்போ பெயர் இடம்பெறாது எனவும், அதற்கு பதிலாக 'பைஜூ' நிறுவனத்தின் பெயர் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கல்வி தொடர்பான செயலி நிறுவனமான 'பைஜூ' முறைப்படி இந்திய அணியின் ஸ்பான்சராவதற்கான அதிகாரபூர்வமாக ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்திய அணி ஓப்போ பெயர் பாதிக்கப்பட்ட ஜெர்சிக்கு பதிலாக 'பைஜூ' நிறுவனத்தின் பெயர் பதிக்கப்பட்ட ஜெர்சி அணிந்தே விளையாடும்.