டி20 உலகக்கோப்பையில் இடம்பெற்றுள்ள அணிகளை இரண்டு பிரிவாக பிரித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும் ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி, முதல் குரூப்பில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளனர். அதேபோல், இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இரண்டாம் குரூப்பில் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக, டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் இடம் பெற்றுள்ளன.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் விளையாட 8 அணிகள் நேரடியாக தகுதிப் பெற்றுள்ளனர். குரூப் ஏ பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, ஐயர்லாந்து, நமீபியா, குரூப் பி பிரிவில் வங்கதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா ஆகிய அணிகளில் குரூப் ஏ, குரூப் பி பிரிவில் இருந்து தலா இரண்டு அணிகள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் போட்டியில் பங்கேற்க உள்ளது.