Published on 13/10/2019 | Edited on 13/10/2019
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரை வென்றது இந்திய அணி. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்திய அணி.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுள்ளது. இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்தது. பிறகு ஆடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 275 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேலும் இந்திய அணி தரப்பில் உமேஷ்யாதவ் மற்றும் ஜடேஜா தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.