இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்ம்ரிதி மந்தனா ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

23 வயதான ஸ்ம்ரிதி மந்தனா ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 51 இன்னிங்ஸ்களில் 2ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட்டை பொறுத்தவரை இதுவே அதிவேக 2000 ரன்கள் ஆகும். அதேபோல சர்வதேச அளவில் மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை எட்டிய வீராங்கனைகளில் பெலிண்டா கிளார்க்(41 இன்னிங்ஸ்), மெக் லானிங்(44 இன்னிங்ஸ்) ஆகியோருக்கு அடுத்தார்போல் ஸ்ம்ரிதி மந்தனா இடம் பிடித்துள்ளார். மேலும் இந்திய ஆடவர் அணியுடன் மொத்தமாகப் பார்க்கும்போது, இந்திய வீரர் தவான் 48 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை எட்டினார். அவருக்கு அடுத்தபடியாக ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்களை எட்டிய இந்தியர் என்ற சாதனையை ஸ்ம்ரிதி மந்தனா படைத்துள்ளார்.