இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்தே சர்ச்சைகளும் தொடங்கிவிட்டன. காலத்தில் நடுவர்களின் தவறான முடிவுகளும், வீரர்களின் செயல்பாடுகள் என பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது இந்த ஐபிஎல். அதில் மிகப்பெரிய சர்ச்சையானது நடுவரின் முடிவை எதிர்த்து தோனி மைதானத்திற்குள் வந்து கோவமாக பேசியது மற்றும் அஸ்வின், ஜோஸ் பட்லரை மான்கட் முறையில் அவுட்டாக்கியது ஆகியவை ஆகும்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள புகழ்பெற்ற முன்னாள் நடுவர் சைமன் டஃ புல், "கிரிக்கெட் விதி 41.16 ன் படி பந்துவீச்சாளர் பந்து வீசுவதற்கு முன் நான்-ஸ்டைரக்கர் முனையில் உள்ள பேட்ஸ்மேன் கிரிஸை விட்டு வெளியே செல்வது விதிமீறலாகும். எனவே அஸ்வின் மான்கட் செய்ததில் தவறில்லை. அதே நேரம் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நடுவரின் தவறான முடிவை எதிர்த்து தோனி மைதானத்திற்குள் வந்து நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தது தவறு தான். நடுவர்கள் எப்போதும் 100 சதவீதம் சரியாக இருக்க முடியாது. ஆனால் நடுவர்கள் தங்கள் மேல் ரசிகர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வீணாக்கும் வகையில் நடந்துகொள்ள கூடாது" என கூறியுள்ளார்.