Published on 04/09/2018 | Edited on 04/09/2018

இந்தாண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் போட்டி நியு யார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் கலந்துகொண்டு விளையாடும் ரஷ்யாவைச் சேர்ந்த மரியா ஷரப்போவா ஸ்பெயினின் கர்லா சுவரேச் நவர்ரோவுடன் நான்காம் சுற்றில் எதிர்கொண்டார். தொடக்கம் முதலே தடுமாறிய ஷரப்போவா 4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். மரியா ஷரப்போவா ஐந்து முறை க்ராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.