Skip to main content

இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது பிரான்ஸ்!

Published on 16/07/2018 | Edited on 16/07/2018
france world cup


 

 

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோசியாவை வீழ்த்தி இரண்டாவது முறையாக பிரான்ஸ் அணி உலகக் கோப்பையை வென்றுள்ளது. பிரான்ஸ் அணியின் வெற்றியை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

ரஷியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இதில் போட்டியின் முதல் பாதியில் பிரான்ஸ் அணி 2 கோல்களும், குரோஷியா அணி ஒரு கோலும் அடித்தன.

இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் பிரான்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. இதனால் 4-1 என்ற கோல் கணக்கில் அந்த அணி முன்னிலை பெற்றது. அதனையடுத்து, குரோஷியா அணி 1 கோல் அடித்தது. இதை தொடர்ந்து குரோஷியா அணி கோல் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீண்ட நேரமாக இரு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை.

இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 1998ல் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணி 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இரண்டாவது முறையாக கோப்பையை தன்வசப்படுத்தியுள்ளது.
  world cup


 

 

சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு பரிசுத்தொகையாக 255 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இந்த முறை பிரான்ஸ் அணி தான் பங்கேற்ற லீக் போட்டிகளில் எந்த அணியிடமும் தோல்வி அடைந்ததில்லை.

உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணியின் வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் பல்வேறு இடங்களில் கொண்டாடினர்.