Skip to main content

டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம்

Published on 09/08/2017 | Edited on 09/08/2017
டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம்

ஐசிசி வெளியிட்டுள்ள பட்டியலின்படி, இந்திய அணி 123 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக தொடரை 1க்கு 3 என இழந்த தென்ஆப்பிரிக்கா 7 புள்ளிகளை இழந்து 110 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடர்கிறது.

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரை கைப்பற்றியதன் மூலம் 6 புள்ளிகள் அதிகம் பெற்று 106 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலிய அணி 100 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

சார்ந்த செய்திகள்