ஐபிஎல் ஏலம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த ஏலத்தில் சென்னை உட்பட எந்த அணியும், சுரேஷ் ரெய்னாவை வாங்கவில்லை. இதன்காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சுரேஷ் ரெய்னாவை வாங்காததற்காக சென்னை அணியை, அந்த அணியின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் விமர்சித்து வரும் நிலையில், அவரை வாங்காததற்கு என்ன காரணம் என்பதை சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர், ”ரெய்னா கடந்த 12 ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்காக மிகவும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தவர்களில் ஒருவர். ரெய்னா இல்லை என்பது எங்களுக்கு மிகவும் கடினமாகத்தான் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் அணியின் அமைப்பு என்பது வீரரின் ஃபார்மை பொறுத்தும், எந்த மாதிரியான அணியை வைத்திருக்க வேண்டும் என நிர்வாகம் விரும்புகிறது என்பதைப் பொறுத்தும் உள்ளது. அவர் இந்த அணிக்கு பொருந்தமாட்டார் என நினைத்தற்கு அதுவும் ஒரு காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.