Published on 09/07/2019 | Edited on 09/07/2019
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய அண்டர் 19 அணியின் பயிற்சியாளருமான டிராவிட், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் விதமாக கடந்த 2000 ஆவது ஆண்டு தேசிய கிரிக்கெட் அகாடமி உருவாக்கப்பட்டது. இளம் வீரர்களின் பயிற்சி, அவர்களுக்கான ஆலோசனைகள் வழங்குவது, வீரர்களை ஊக்கப்படுத்துவது, ஊழியர்கள் தேர்வு என தேசிய கிரிக்கெட் அகாடமியின் முழு பொறுப்பையும் ராகுல் டிராவிட் ஏற்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்திய ஆண்கள் மட்டும் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருடன் இணைந்து அவருக்கு ஆலோசனைகள் வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.