ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் ரபேல் நடால் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
கனடாவில் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று போட்டியில் ஸ்பெயினின் முன்னனி வீரர் ரபேல் நடாலை எதிர்த்து குரேஷியாவின் போர்னா கோரிக் களமிறங்கினார். தொடக்கம் முதலே ரபேல் நடால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் கோரிக்கை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நடால், அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.