Skip to main content

புரோ கபடி லீக் தொடர் தமிழ் தலைவாசுக்கு 3-வது வெற்றி

Published on 25/09/2017 | Edited on 25/09/2017
புரோ கபடி லீக் தமிழ் தலைவாஸ் அணி, பெங்கால் வாரியர்சை தோற்கடித்து 3-வது வெற்றியை பெற்றது

5-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் நேற்று இரவு நடைபெற்ற 92-வது லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) தமிழ் தலைவாஸ் அணி, பெங்கால் வாரியர்சை எதிர்கொண்டது.

இதில், தமிழ் தலைவாஸ் அணி 33-32 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை தோற்கடித்தது. 12-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாசுக்கு இது 3-வது வெற்றியாகும். 18-வது லீக்கில் விளையாடிய பெங்கால் அணிக்கு 5-வது தோல்வியாகும். 

சார்ந்த செய்திகள்