தேசிய சீனியர் ஸ்குவாஷ் போட்டி:
தமிழக வீராங்கனை ஜோஸ்னா வெற்றி
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் 74-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. பெண்கள் பிரிவில் தமிழக வீராங்கனைகளான ஜோஸ்னா சின்னப்பா, லக்சயா ராகவேந்திரன் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், முதல் செட்டை 11-6 என கைப்பற்றிய ஜோஸ்னா, அடுத்த செட்டை 8-11 என இழந்தார். அதன் பின், எழுச்சி கண்ட இவர் அடுத்த இரண்டு செட்டையும் 11-2, 11-4 என்ற கணக்கில் கைப்பற்றி தொடரை வென்றார்.