Published on 16/09/2021 | Edited on 16/09/2021

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி வருகிறார். அண்மையில் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம், என்.சி.சி அமைப்பில் காலத்திற்கேற்றவாறு மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து ஆராய குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்த குழுவில் தோனி இடம்பெற்றுள்ளார். முன்னாள் எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் தோனி மட்டுமின்றி தொழிலதிபர் ஆனந்த் மஹேந்திரா, எம்.பி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக துணை வேந்தர் நஜ்மா அக்தர் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.