Published on 21/09/2020 | Edited on 21/09/2020

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரரான முகமது ஷமி, ஐபிஎல் வரலாற்றில் தன்னுடைய சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற அப்போட்டி சமநிலையில் முடிய, வெற்றியைத் தீர்மானிக்க நடந்த சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் பஞ்சாப் அணியைச் சேர்ந்த பந்துவீச்சாளர் முகமது ஷமி 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் முகமது ஷமியின் சிறந்த பந்துவீச்சாக இச்சாதனை பதிவாகியுள்ளது.
இதற்கு முன்பு, மும்பை அணிக்கு எதிராக 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றியதே முகமது ஷமியின் சிறந்த பந்துவீச்சாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.