16 ஆவது ஐபிஎல் சீசனின் 14 வது லீக் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ப்ரம்சிம்ரன், புவனேஷ்வர் குமார் வீசிய முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ஷிகர் தவான் நிலையாக ஆட பின்வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஐந்தாவது விக்கெட்டிற்கு வந்த சாம்கரன் மட்டும் ஷிகர் தவனுக்கு கைகொடுத்து ஆட அணியின் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 99 ரண்களும் சாம்கரன் 22 ரன்களும் அடித்து இருந்தனர். மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க எண்ணில் வெளியேறினர். சிறப்பாக பந்து வீசிய பஞ்சாப் அணியில் மார்கண்டே நான்கு விக்கெட்டுகளையும் உம்ரான் மாலிக் மற்றும் ஜெனஸன் தலா இரண்டு விக்கெட்டுகளையும் புவனேஷ்வர் குமார் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணியில் ஹாரி ப்ரூக் 14 ரன்களிலும் மயங்க் அகர்வால் 21 ரன்களிலும் வெளியேற ராகுல் திரிப்பாதியும் கேப்டன் எய்டன் மார்க்ரமும் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். முதலில் நிதானமாக ஆடிய ராகுல் திரிப்பாதி பின்னர் அதிரடியாக விளையாடி ரன்களை வேகமாக சேர்க்க ஆரம்பித்தார். அவருக்கு இணையாக கேப்டன் மார்கரமும் வேகமாக ரன்களை சேர்க்க ஹைதராபாத் அணி 17.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராகுல் திரிப்பாதி 74 ரன்களுடனும் எய்டன் மார்க்ரம் 37 ரன்கள் உடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ஆட்டநாயகனாக ஷிகர்தவான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.