பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உள்ள குடிநீரை கொண்டு கார்களை கழுவியதால் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலிக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி-ஹரியாணா எல்லைப் பகுதியில் உள்ள விராட் கோலியின் வீட்டில் அவருக்கு சொந்தமான கார்களை சுத்தம் செய்ய அப்பகுதிக்கு பயன்படும் குடிநீரை அவரது உதவியாளர்கள் உபயோகித்ததாக கோலியின் பக்கத்துக்கு வீட்டுகார இளைஞர் குருகிராம் நகராட்சியில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் அங்கு வந்த அதிகாரிகள் நீரை பயன்படுத்தியது உண்மை தான் என கண்டறிந்து கோலிக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தனர். நகராட்சியின் விதிமுறைப்படி குடிநீரை வீணாக்கி முதன் முறை மாட்டினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும், இரண்டாம் முறைக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். எனவே மீண்டும் நீரை வீணாக்கினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்த சென்றுள்ளனர்.