Published on 19/10/2020 | Edited on 19/10/2020

13-வது ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதின. சமநிலையில் முடிந்த இந்தப் போட்டியில், வெற்றியைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. பரபரப்பாக நடந்த சூப்பர் ஓவரும் சமநிலையில் முடிய, வெற்றியைத் தீர்மானிக்க மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடந்த இரண்டாவது சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது.
முதலாவது சூப்பர் ஓவரில், கே.எல்.ராகுல் ரன் அவுட் செய்த புகைப்படத்தைப் பகிர்ந்த ரசிகை ஒருவர் என்னுடைய 'தல' எனப் பதிவிட்டார். அதற்குப் பதிலளித்த கே.எல்.ராகுல், 'ஒரே ஒரு 'தல'தான் இருக்கிறார். அது யாரென்று அனைவருக்கும் தெரியும்' எனப் பதிவிட்டுள்ளார்.