Skip to main content

75 அடி தூரத்தில் இருந்து பந்தை உதைத்து கோலாக மாற்றிய சுனில் ஷேத்ரி!

Published on 08/01/2018 | Edited on 08/01/2018
75 அடி தூரத்தில் இருந்து பந்தை உதைத்து கோலாக மாற்றிய சுனில் ஷேத்ரி!

ஐ.எஸ்.எல். கால்பந்தாட்டப் போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகளின் லீக் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகின்றன. பெங்களூரு எஃப்.சி மற்றும் அட்லெடிகோ தி கொல்கத்தா அணிகளுக்கு இடையே நேற்று லீக் போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் வைத்து நடைபெற்றது.



இந்த ஆட்டத்தில் இரண்டு அணிகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. இருந்தபோதிலும், பெங்களூரு அணியின் கையே ஓங்கி இருந்தது. ஆட்டத்தில் 39ஆவது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் வீரர் தவறாக பாஸ் செய்த பந்தினை கோல் கம்பத்தில் இருந்து 75 அடி தூரத்தில் இருந்த பெங்களூரு அணியின் கேப்டன் சுனில் ஷேத்ரி, லாவகமாக உதைத்து கோலாக மாற்றினார். நீண்ட தூரம் காரணமாக காற்றி வளைந்து சென்ற பந்து, கோல் வலைக்குள் சென்றது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்த ஆட்டத்தில் அடிக்கப்பட்ட ஒரே கோல் இது என்பதால், பெங்களூரு அணி வெற்றிபெற்றது.

33 வயதான சுனில் ஷேத்ரி இந்திய கால்பந்தாட்ட அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். உலக கால்பந்தாட்ட ஜாம்பவான்களின் பட்டியலிலும் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்