Published on 02/01/2021 | Edited on 02/01/2021

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி, கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த கங்குலிக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வந்ததாகவும் தகவல்கள் வெளியாகிவுள்ளன.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா, கங்குலியின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர், “கங்குலி சீக்கிரம் நலம்பெற பிரார்த்திக்கிறேன். நான் அவரது குடும்பத்தினரிடம் பேசினேன். அவர் சீராக உள்ளதோடு, சிகிச்சைக்கும் நன்றாக ஒத்துழைக்கிறார்" என தெரிவித்துள்ளார்.