ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏழாவது உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், பன்னிரண்டு அணிகள் இரு குழுக்களாக விளையாடிவருகின்றன. இதில் இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதிபெறும். இதில் நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் சரியாக விளையாடாததால், அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது. நேற்று (04.11.2021) நடைபெற்ற இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கான ஆட்டத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியைத் தழுவியது. அதனைத் தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் பிராவோ தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுடன் நாளை வெஸ்ட் இண்டீஸ் அணி மோதுகிறது. இது பிராவோவுக்கு இறுதி போட்டியாக இருக்கும். ஓய்வு குறித்து தெரிவித்துள்ள பிராவோ, "கடந்த 18 ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடியுள்ளேன். அதில் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளேன். தற்போது வெளியேறும் நேரம் வந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.