ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில், தொடர்ச்சியான இரு தோல்விகளைச் சந்தித்த இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணியிடம் இழந்தது. இதனையடுத்து, இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து முன்னணி வீரர்கள் பலரும் தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். விராட் கோலியின் கேப்டன்ஷிப் குறித்து, கவுதம் காம்பீர் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்ஃபான் பதான், இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து, தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நமது பந்துவீச்சாளர்களின் தரம் குறித்து கேள்வியெழுப்ப முடியாது. அதே நேரத்தில், அவர்களது நிலையான ஆட்டமின்மை குறித்து கேள்வியெழுப்பலாம். ஆஸ்திரேலியாவில், துல்லியமாகப் பந்துவீசும் முறையை வேகமாகக் கண்டுபிடிப்பதில்தான் அனைத்தும் உள்ளது. அது இன்னும் நடக்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.