அமரப்பள்ளி ஊழல் வழக்கில் தோனியின் பெயரையும் சேர்க்க வேண்டும் என புகார்தாரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்களிடம் வீடு கட்டித்தருவதாக பணம் பெற்று வீடுகளை வழங்காமல் ஏமாற்றியதாக அமரப்பள்ளி குழுமத்துக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பட்டியலில் தோனியின் பெயரையும் சேர்க்க வேண்டும் என்று புகார்தாரர்கள் வலியுறுத்திள்ளனர். கடந்த மாதம் 27-ம் தேதி அமரப்பள்ளி குழுமத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் அனில் குமார் சர்மா, குழும உறுப்பினர்கள் ஷிவ பிரியா, மோகித் குப்தா உள்ளிட்டோருக்கு எதிராக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. இந்த வழக்கில் தோனியின் பெயரையும் சேர்க்க வேண்டும் எனக் கூறி புகார்தாரர்கள் சார்பில் ரூபேஷ் குமார் சிங் மனு அளித்துள்ளார். தோனி, அமரப்பள்ளி குழுமத்தின் விளம்பர தூதராக 6 ஆண்டுகள் இருந்தார். ஆனால் அதற்கான சம்பளம் தனக்கு வழங்கப்படவில்லை என தோனி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் பட்டியலில் தோனியின் பெயரையும் சேர்க்க வேண்டும் என்று புகார்தாரர்கள் வலியுறுத்திள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.