கரோனா காரணமாக மார்ச் மாதம் தொடங்க இருந்த ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது 13 -ஆவது ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. ஐ.பி.எல். டைட்டில் ஸ்பான்சராக சீன நிறுவனமான 'விவோ' இருந்து வந்தது. கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலையடுத்து சீன நிறுவனங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வெகுவாக எழுந்தது. அதனையடுத்து விவோ நிறுவனம் இந்தாண்டிற்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதனையடுத்து புது ஸ்பான்சரைத் தேடும் பணிகள் நடைபெற்று வந்தன. விவோ இடத்தைப் பிடிப்பதற்கு 'பைஜுஸ்', 'கொகோ கோலா', 'ட்ரீம் 11', 'பதஞ்சலி' உட்பட பல நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டிகள் நிலவி வந்தன.
இந்நிலையில் தற்போது புது ஸ்பான்சராக 'ட்ரீம்11' ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. டெண்டர் அடிப்படையில் ஸ்பான்சர்ஷிப் உரிமை தேர்வானது. அதில் பைஜுஸ் நிறுவனம் 125 கோடிக்கும், டாடா சன்ஸ் 180 கோடிக்கும், ட்ரீம் 11 நிறுவனம் 222 கோடிக்கும் உரிமை கோரியது, அதில் அதிகபட்சத் தொகைக்கு கேட்ட ட்ரீம் 11 நிறுவனத்திற்கு இந்த உரிமை கிடைத்துள்ளது.