
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அபுதாபியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களை எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 53, மோர்கன் 39, சுப்மேன் கில் 21 ரன்கள் எடுத்தனர்.

பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இண்டியன்ஸ் அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக டி- காக் 78, கேப்டன் ரோஹித் சர்மா 35 ரன்கள் எடுத்தனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்தது மும்பை இண்டியன்ஸ் அணி.