ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 11ஆவது சீசனின் 3ஆவது போட்டியில் பெங்களூரு அணியை கொல்கத்தா அணி வீழ்த்தியது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் ஐபிஎல் போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக ஏபி டிவில்லியர்ஸ் 44 ரன்கள் எடுத்திருந்தார். கடைசியாக களமிறங்கிய மந்தீப் சிங் அதிரடியாக ஆடி 18 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 18.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரேன் 17 பந்துகளில் அதிவேகமாக அரைசதம் விளாசி அசத்தினார். கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்த கேப்டன் 35 ரன்கள் எடுத்திருந்தார். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.