Skip to main content

பிக் பாஷ், பி.எஸ்.எல். தொடர்களை அடித்து நொறுக்கிய ஐ.பி.எல்.

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

இன்றைய இணைய உலகில் சமூக வலைதளங்கள் இரசிகர்களையும் அவர்களின் பிரபலங்களையும் எளிதாக இணைத்துவருகிறது. குறிப்பாக கிரிக்கெட் லீக் தொடர்களில் சமூக வலைதளத்தின் பயன்பாடும் உபயோகமும் அதிகமாக உள்ளது. சமூக வலைதளங்கள் மூலமாகவே பல கிரிக்கெட் லீக் தொடர்களின் அப்டேட்கள் அவர்களின் இரசிகர்களுக்கு வழங்கப்படுகிறது. 

 

ipl

 

மேலும் சமூக வலைதளங்கள் மூலம் லீக் தொடரின் பட்டியல், டிக்கெட் விற்பனை தொடக்கம் மற்றும் சில லீக் தொடரின் விளம்பரம் போன்றவற்றுக்கு பெரிதும் உதவுகிறது. அதேபோல் ஒவ்வொரு லீக் தொடருக்கும் தனி தனி சமூக வலைதளங்கள் உள்ளது. இதனை ஏராளமான இரசிகர் பட்டாளம் பின் தொடர்கின்றனர். அதன்படி இரசிகர்கள் அதிகம் பின் தொடரும் டாப் ஐந்து கிரிக்கெட் லீக் தொட்ரகளின் பட்டியல்.
 

இதில் பி.பி.எல். எனப்படும் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடருக்கு ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்கள் உள்ளது. இதற்கு இன்ஸ்டாகிராம் பக்கம் இல்லை. இதில் ஃபேஸ்புக் பக்கத்தில் 0.89 மில்லியன் பேரும் ட்விட்டரில் 0.059 பேரும் பின் தொடர்கிறார்கள். மொத்தமாக பி.பி.எல். தொடர் 0.954 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இந்த தொடர் 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
 

அடுத்தப்படியாக ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் தொடரை 3.16 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இதில் ஃபேஸ்புக் 2.4 மில்லியன், ட்விட்டர் 0.29 மில்லியன் மற்றும் இன்ஸ்டாகிராம் 0.47 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது. இது 2011-ம் தொடங்கப்பட்டது. 
 


வெஸ்ட் இண்டிஸ்-ன் கரீபியன் ப்ரீமியர் லீக் எனப்படும் சி.பி.எல். தொடர் 2013-ல் தொடங்கப்பட்டது. ஆசியாவில் மிகவும் பிரபலமான இந்த தொடருக்கு சமூக வலைதளங்களில் மொத்தம் 3.83 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். இதில் ஃபேஸ்புக் பக்கத்தில் 3.4 மில்லியன், ட்விட்டர் 0.181 மில்லியன் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 0.250 பேர். குறிப்பாக தினமும் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரிக்கும் தொட்ராக இது உள்ளது. 
 

இரண்டாம் இடத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக்-ஐ (பி.எஸ்.எல்) 5.54 பேர் பின் தொடர்கிறார்கள். இதில் ஃபேஸ்புக் பக்கத்தில் 3.9 மில்லியன், ட்விட்டர் 1.2 மில்லியன் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 0.44 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். 
 

பி.எஸ்.எல். எப்போதும் அரபு நாடுகளில் நடைபெறும், இருந்தபோதும் இதற்கு பாகிஸ்தான் இரசிகர்களின் பட்டாளம் குறைவதில்லை. இது உள்நாட்டிலேயே நடந்தால் இன்னும் பின் தொடர்புவர்களின் எண்ணிக்கை கூடும் என கருதப்படுகிறது.
 

இவை அனைத்தையும் அடித்து நொறுக்கி முதலிடத்தில் ஐ.பி.எல். உள்ளது. ஐ.பி.எல் தொடருக்கு மொத்தம் 30.6 மில்லியன் பின் தொடர்பாளர்கள் உள்ளனர். இதில் ஃபேஸ்புக் பக்கத்தில் 21 மில்லியன், ட்விட்டர் 6.5 மில்லியன் மற்றும் இன்ஸ்டாகிராமில் 3.1 மில்லியன் பேர் உள்ளனர். இதற்கும் பின் தொடர்புவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது. ஐ.பி.எல். தொடர் 2008-ம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.