Skip to main content

புஜாரா, ரிஷப் பந்த் அசத்தல்; இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா

Published on 04/01/2019 | Edited on 04/01/2019

 

adsfacws

 

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாம் நாள் ஆட்டமான இன்று தனது பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக 193 ரன்கள் அடித்த புஜாரா வெறும் 7 ரன்களில் தனது இரட்டை சதத்தை தவறவிட்டார். அதன் பின் வந்த ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி 189 பந்துகளில் 159 ரன்களை எடுத்தார். மேலும் ஜடேஜா 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து 622 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய அணி தனது இன்னிங்சை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக நாதன் லியொன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் தனது பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்து இந்திய அணியை விட 598 ரன்கள் பின்தங்கியுள்ளது.