இலங்கை அணியை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இந்தியா இலங்கை இடையே கொழும்புவில் வைத்து நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்க்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வுசெய்த இந்திய அணி, முதல் இன்னிங்க்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக புஜாரா 133 ரன்களும், ரஹானே 132 ரன்களும் எடுத்திருந்தினர்.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்க்ஸில் 183 ரன்களில் ஆட்டமிழந்தது. பின்னர் பாலோ ஆன் பெற்ற இலங்கை அணி 386 ரன்கள் எடுத்திருக்கையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாவது இன்னிங்க்ஸில் இலங்கை அணியின் சார்பில் குஷால் மெண்டிஸ் 110 ரன்கள், கருணரத்னே 141 ரன்களும் எடுத்திருந்தார்.
இதன்மூலம் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வெற்றிபெற்றது. மேலும், மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.