Skip to main content

இந்தியா அபார வெற்றி

Published on 04/09/2017 | Edited on 04/09/2017

இந்தியா அபார வெற்றி

14 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் இன்று தென்ஆப்பிரிக்காவுடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 60 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 101 ரன்கள் குவித்தார்.
 
20 ஓவர் போட்டியில் சதம்
அடித்த முதல் இந்திய வீரர் ஆவார். மேலும் சர்வதேச அளவில் சதம் அடித்தவர்கள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

யுவராஜ் சிங் 30 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 37 ரன்கள் எடுத்தார். 187 ரன் இலக்குடன் களமிறங்கியது  தென்னாப்பிரிக்க அணி.

5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன் மட்டுமே எடுத்து தென்னாப்பிரிக்கா  தோல்வி அடைந்தது.

சார்ந்த செய்திகள்