
முதல் டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பிப்ரவரி 5- ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கும் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. பிப்ரவரி 13- ஆம் தேதி தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 50% பார்வையாளர்களை அனுமதிக்க பி.சி.சி.ஐ. ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்தியாவுடனான டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் பங்கேற்க இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.