Published on 11/08/2021 | Edited on 11/08/2021

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக இங்கிலாந்து சென்ற இந்திய அணி, தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றிபெறும் நிலையில் இருந்தபோது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சமனில் முடிந்தது.
இந்தநிலையில், சர்வதேச கிரிக்கெட் வாரியம், முதல் டெஸ்டில் மெதுவாக பந்து வீசியதற்காக (slow over rate) இந்தியா, இங்கிலாந்து இரு அணிகளுக்கும் போட்டிக் கட்டணத்திலிருந்து 40 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது.
மேலும் இரு அணிகளுக்கும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளிலிருந்து இரண்டு புள்ளிகளும் (two points) குறைக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் நாளை (12.08.2021) தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.