Skip to main content

வெற்றிபெறுமா இந்தியா? 159 ரன்கள் இலக்கு

Published on 08/02/2019 | Edited on 08/02/2019

 

இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து இந்திய அணியின் பந்துவீச்சை நான்கு பக்கமும் பரக்கவிட்டு 220 ரன்களை இலக்காக வைத்திருந்தனர். அந்த கடின இலக்கை கொண்டு ஆடிய இந்திய அணி மலமலவென விக்கெட்டுகளை விட்டு, மிகவும் மோசமான தோல்வியை சந்திதது. அதனால் இந்த இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்துடன் இந்திய அணி விளையாடிவருகிறது. இந்தமுறையும் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடினாலும் கடந்த முறையை போன்று விளையாட முடியாமல் சிரமப்பட்டு விளையாடி வருகின்றனர். இந்திய அணியின் பந்துவீச்சாளர் குருனால் பாண்டியா 23 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக பந்துவீசினார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணிக்கு 159 ரன்கள் இலக்கு.

 

 

Next Story

‘5வது வெற்றி...’ - இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் பாராட்டு 

Published on 23/10/2023 | Edited on 23/10/2023

 

PM Modi congratulated India on their win against New Zealand

 

உலகக் கோப்பையின் 21வது லீக் ஆட்டம் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து  அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்திருந்தது.

 

இதையடுத்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இழுக்குடன் களமிறங்கிய இந்திய அணி 48 ஓவர்கள் முடிவில் 274 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷமிக்கு  ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

 

இந்த நிலையில் நியூசிலாந்தை இந்தியா வெற்றி பெற்றதற்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், “நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றதற்கு இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள். இது ஒரு அற்புதமான குழு முயற்சி, அங்கு அனைவரும் பங்களித்தனர். களத்தில் அர்ப்பணிப்பும் திறமையும் முன்மாதிரியாக இருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

Next Story

அணியின் தவறுக்கு டார்கெட் செய்யப்படுகிறாரா தினேஷ் கார்த்திக்?

Published on 12/02/2019 | Edited on 12/02/2019

 

 

d

 

நியூசிலாந்தில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் கடைசி ஓவரில் சிங்கிள் எடுக்கும் வாய்ப்பு இருந்தும் தன்னுடைய ஓவர்-கான்பிடன்ஸ் காரணமாக சிங்கிள் எடுக்க மறுத்தார். போட்டியின் முடிவில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியை இழந்தது. இதனால் தினேஷ் கார்த்திக்கின் அந்த செயல்பாடு ரசிகர்களாலும், முன்னாள் வீரர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

 

3-வது டி20 போட்டி நடைபெற்ற ஹாமில்டன் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான ஒன்று. இருப்பினும் 213 ரன்களை எந்த ஒரு மைதானத்திலும் 20 ஓவர்களில் சேசிங் செய்யும்போது ஒரு சிறிய தவறும் அணியின் வெற்றியை பாதிக்கும். தவான் 4 பந்துகளில் 5 ரன்கள், தோனி 4 பந்துகளில் 2 ரன்கள் என சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். விஜய் சங்கர், ரிஷாப் பண்ட் ஆகிய இருவரும் இன்னிங்ஸின் முதல் பாதியில் அதிரடியில் அசத்தினர். 

 

 

dd

 

மிடிலில் ஹர்திக் பாண்டியா அதிரடி காட்டினார். 14 ஓவர்கள் ஒரு முனையில் பொறுமையாக ஆடிய ரோஹித் ஷர்மா அதிரடியை தொடங்கும்போது அவுட் ஆனார். இறுதியில் கார்த்திக் மற்றும் குருனால் பாண்டியா ஆகியோர் 28 பந்துகளில் 68 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை சேசிங் செய்தனர். இறுதிவரை முயன்றும் நூலிழையில் மிஸ் செய்தனர்.

 

 
முதல் 56 பந்துகளில் 100 ரன்களை எடுத்த இந்திய அணி, அடுத்த 38 பந்துகளில் 50 ரன்களை மட்டுமே எடுத்தது. மேலும் ஆட்டத்தின் இந்த கட்டத்தின்போது பண்ட், ஹர்திக் பாண்டியா, ஷர்மா, தோனி உள்ளிட்டோரின் விக்கெட்களை இழந்தது. இந்த மிடில் ஓவர்களில் ரன் ரேட்டையும், முக்கிய விக்கெட்களையும் சரியான விகிதத்தில் கன்ட்ரோல் செய்ய தவறியது. இதுதான் ஆட்டத்தில் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு. 

 


ஒருவேளை தினேஷ் கார்த்திக் சிங்கிள் ரன் எடுத்திருந்தாலும் வெற்றி பெற்றிருக்க முடியுமா என்பது பெரிய கேள்விக்குறிதான். அனுபவம் வாய்ந்த பவுலர் சவுதி மிகவும் நேர்த்தியாக பல வேரியேஷனில் அசத்தலாக வீசினார். 18-வது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் பவுண்டரிகள் பறந்தாலும் அடுத்த மூன்று பந்துகளையும், கடைசி ஓவரையும் தன் பவுலிங் ஸ்கில் மூலம் அற்புதமாக வீசினார். இந்த நிலையில் எப்படிப்பட்ட பேஸ்ட்மேனுக்கும் அது கடினமான தருணம்தான். உலகின் பெஸ்ட் பினிஷர் என்று பெயர் எடுத்த தோனி பினிஷிங் செய்ய முடியாமல் போன இன்னிங்ஸ்கள் உண்டு. ஆனால் தினேஷ் கார்த்திக் சிங்கிள் எடுக்க தவறியதுதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்பதுபோல பேசப்பட்டு வருகிறது. 

 

செய்தத் தவறை உணர்ந்த கார்த்திக் உடனடியாக மைதானத்திலேயே குருனால் பண்டியாவிடம் தனது தவறை ஒப்புக்கொண்டார். டி20 போட்டிகளில் சேசிங்கின்போது தினேஷ் கார்த்திக் நாட் அவுட்டாக இருந்து தோற்ற முதல் போட்டி இதுதான் என்பது கவனிக்கத்தக்கது. வங்கதேசம் அணிக்கு எதிராக 2018-ல் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 12 பந்துகளுக்கு 34 ரன்கள் என்ற கடின இலக்கை சேசிங் செய்து மாஸ் காட்டினார். இதுபோல பல போட்டிகளில் இறுதி கட்டங்களிலும், மிடிலிலும் சிறப்பாக ஆடியுள்ளார் கார்த்திக். அவர் சிறு தவறு செய்யும் போதெல்லாம் அதிகம் விமர்சிக்கப்படுகிறார். ஆனால் சிறப்பாக ஆடும்போது பெரிய அளவில் பாராட்டப்படுவதில்லை.

 

 

dd

 

தினேஷ் கார்த்திக் கடந்த இரண்டு வருடங்களாக நல்ல பார்மில் உள்ளார். 16 டி20 இன்னிங்ஸில் 29௦ ரன்கள், பேட்டிங் சராசரி 50+, ஸ்ட்ரைக் ரேட் 155+. 11  முறை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் இந்திய அணிக்கு விளையாடிய 20 ஒருநாள் போட்டிகளிலும் மிக சிறப்பாக ஆடியுள்ளார் கார்த்திக். 17 இன்னிங்ஸ்களில் 425 ரன்கள் குவித்துள்ளார். 8 முறை நாட் அவுட் பேட்ஸ்மேன்.  

 

இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றபோது அணியில் இருந்தவர் கார்த்திக். அந்த தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய சூழ்நிலையின்போது ஸ்மித்தின் கேட்ச்சை அட்டகாசமாக பிடித்தார். பீல்டிங்கில் அசத்தினார். அந்த போட்டியில் இந்திய அணி வென்றது.  

 

எம்.எஸ்.தோனிக்கு முன்பிருந்தே இந்திய அணியில் இருப்பவர் தினேஷ் கார்த்திக் சர்வதேச போட்டிகளில் 2004-ஆம் ஆண்டு முதல் இன்று வரை அணியில் விளையாடி வருகிறார். இன்று விளையாடிவரும் இந்திய அணியில் சீனியர் வீரர் இவர்தான். இவருடைய திறமை மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என்பதே நிதர்சனம்.