Skip to main content

ஹைதராபாத் அணிக்கு  இவரா கேப்டன் ?

Published on 29/03/2018 | Edited on 29/03/2018


 

Hyderabad team captain  ?

2018 ஆம் ஆண்டு  ஐ.பி.எல் போட்டிக்கான ஹைதாராபாத் அணியின்   கேப்டனாக கேன் வில்லியம்ஸை ஹைதராபாத் நிர்வாகம் நியமித்துள்ளது. 

ஹைதராபாத் அணியின் கேப்டனாக இதற்கு முன்பு டேவிட் வார்னர் இருந்தார். தென்னாப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய புகாரில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் இருவரையும் 
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை வித்தித்துள்ளது.  ஐ.பி.எல்  போட்டிகளிலும் இருவரும் விளையாட முடியாது அதனால் ஸ்டீவ் ஸ்மித் ராஜஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பிலும், அணியிலிருந்தும் நீக்கிவிட்டு கேப்டனாக ரஹானேவை ராஜஸ்தான்  நிர்வாகம் நியமித்தது. வார்னரும் ஹைதராபாத் அணியிலிருந்து  நீக்கப்பட்டார்.  ஆனால் யார் கேப்டன் என்று  ஹைதராபாத் நிர்வாகம்  அறிவிக்காமல் இருந்தது. தற்போது நியூசிலாந்து அணியின் கேப்டனாக உள்ள கேன் வில்லியம்ஸை ஹைதராபாத் நிர்வாகம் கேப்டனாக நியமித்துள்ளது.