இங்கிலாந்தில் வரும் மே 30-ம் தேதி தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை நடக்கவிருக்கிறது உலகக்கோப்பை தொடர். இது குறித்து இந்திய மற்றும் சென்னை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் அளித்துள்ள ஒரு பேட்டியில், இந்திய அணியில் ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராட் கோலி ஆகிய வீரர்கள் சிறப்பான அடித்தளம் அமைக்க உள்ளனர். இவ்வாறு இருக்கையில் பின் வரிசை வீரர்களான தோனி, ஹர்திக் பாண்டியாவுக்கு அணி நிர்வாகம் அவர்கள் விருப்பம் போல் விளையாட சுதந்திரம் தர வேண்டும். அவர்கள் இஷ்டம் போல் அவர்களை விட்டுவிடுங்கள்.
அதேபோல் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரிட் பும்ராவை பற்றி கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், “உலக கோப்பை போட்டியின் போது ஆட்டத்தின் போக்கில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மாற்றத்தை ஏற்படுத்துவார். இதயம் எப்படி உடலுக்கு முக்கியமானதான ஒன்றாக உள்ளதோ அதேபோல் பும்ராவும் இந்திய அணிக்கு முக்கியமானவர். உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் பும்ரா என்று கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் தெரிவித்துள்ளார்” என்று தெரிவித்தார்.