Published on 03/09/2021 | Edited on 03/09/2021
![avani lekhra](http://image.nakkheeran.in/cdn/farfuture/HOb6T0-n1KO321lkxHYCVjZD1Xz7i36xBdVytaOMiEM/1630648143/sites/default/files/inline-images/erf_0.jpg)
டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக் போட்டியில், இந்தியா தொடர்ந்து பதக்கங்களைக் குவித்துவருகிறது. இன்று (03.09.2021) நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்தநிலையில் இந்தியாவின் அவனி லேகாரா, 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்று சாதித்துள்ளார். ஏற்கனவே 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் அவனி லெகாரா தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தததோடு, பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை படைத்ததும் குறிப்பிடத்தக்கது.