Skip to main content

தோனி போல கேப்டன்ஸி பண்ணணும்! - ஆயத்தமாகும் மெஸ்ஸி 

Published on 01/06/2018 | Edited on 01/06/2018

தோனி பாணியில் கேப்டன்ஷிப்பைக் கையாளப் போவதாக அர்ஜெண்டினா அணியின் கேட்பன் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
 

messi

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, உலகின் தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவராக கொண்டாடப்பட்டவர். 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இருந்து எப்போது ஓய்வுபெறுவார், திறமையை இழந்துவிட்டார் என பல்வேறு விதமாக விமர்சிக்கப்பட்டாலும், இன்றுவரை தன் விளையாட்டின் மூலமாக அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலளித்து வருகிறார். தொடர்ந்து ஃபார்ம் அவுட்டில் இருந்த தோனி, நடந்து முடிந்த ஐ.பி.எல். சீசனில் ஆடிய அதிரடி ஆட்டங்களின் மூலமாக மீண்டும் தனது புகழை விரிவுபடுத்திக் கொண்டார்.
 

ரஷ்யாவில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரத்தில் வரும் ஜூன் 14ஆம் தேதி முதல் உலகக்கோப்பை கால்பந்தாட்டப்போட்டி தொடங்குகிறது. உலகக்கோப்பையை வெல்வதில் வியூகங்கள் என பல்வேறு விதமான கேள்விகளுக்கு அர்ஜெண்டினா அணியின் கேப்டனும், உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரருமான லியோனல் மெஸ்ஸி, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது கேப்டன்ஷிப் குறித்து பேசிய அவர், ஒரு கேப்டனாக தோனியைப் போல செயல்படுவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவரது அணுகுமுறைகளை இந்த முறை கையாள முடிவுசெய்துள்ளேன். அதனால், நிறைய மாற்றங்கள் நிகழும் என்றும் எதிர்பார்க்கிறேன் என பேசியுள்ளார்.