Skip to main content

"கடந்த உலகக் கோப்பை முதல் இதே பிரச்சனை" - இந்திய அணியின் நிலை குறித்து கவுதம் காம்பீர் பேச்சு!

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

Gautam Gambhir

 

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நேற்று நடைபெற்றது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

 

இந்நிலையில், இந்திய அணியின் தற்போதைய நிலை குறித்து, முன்னாள் வீரரான கவுதம் காம்பீர் கூறுகையில், "ஹர்திக் பாண்டியாவால் பந்துவீச முடியவில்லை என்றால் ஆறாவது பவுலராக யாரைத் தேர்வு செய்வீர்கள். கடந்த உலகக் கோப்பை முதல் இதே பிரச்சனை உள்ளது. இந்த இடத்திற்கு விஜய் ஷங்கர் மட்டும்தான் தெரிகிறார். 5 அல்லது 6-ஆம் இடத்தில் பேட்டிங் செய்யும் போது, அதே தாக்கத்தை அவர் ஏற்படுத்துவாரா? 7 முதல் 8 ஓவர்கள் வரை அவரால் பந்துவீச முடியுமா? என்று எனக்குச் சந்தேகமாக உள்ளது. ரோகித் ஷர்மா ஆடும் அணியில் இடம்பிடித்தாலும், இதே பிரச்னை அப்போதும் இருக்கும். முதல் 6 வரிசையில் கணிசமான ஓவர்கள் வீசக்கூடிய வீரர்கள் யாருமே இல்லை. ஆஸ்திரலிய அணியில், ஹென்ரிக்கியூஸ் உள்ளார். பவுலிங் ஆல்ரவுண்டர் சீன் அபோட் உள்ளார். இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா தயாரில்லை என்றால் மாற்று வீரராக யார் உள்ளார்கள்" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.