Skip to main content

“தோனிக்கு பதிலாக ஒருவர் வரவேண்டிய நேரம் வந்துவிட்டது”- கவுதம் கம்பீர் பேட்டி

Published on 19/07/2019 | Edited on 19/07/2019

சமீபத்தில் நடந்து முடிந்த கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி முதலிடத்தை பிடித்திருந்தது. ஆனால், அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறியது.
 

gautam gambhir

 

 

இந்நிலையில் இந்திய அணி அடுத்தடுத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளதாகவும். தோனிக்கு பதிலாக ரிஷப் பந்துக்கு அதிக வாய்ப்பளிக்க இருப்பதாகவும் பிசிசிஐ நினைப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், தற்போதுவரை அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
 

வெஸ்ட் இண்டீஸுடனான ஆட்டத்திற்கு இந்திய அணியின் டீம் குறித்து தகவல் வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது. அதை வைத்துதான் தோனிக்கு இந்திய அணியில் இடம் இருக்கிறதா இல்லையா என்பது தெரிய வரும். 

 
இந்நிலையில் தோனிக்குப் பதிலாக மற்றொரு விக்கெட் கீப்பரை தேர்வு செய்தவற்கான முக்கியமான நேரம் என்று காம்பீர் தெரிவித்துள்ளார்.
 

இதுகுறித்து காம்பீர் கூறுகையில் ‘‘தற்போது எதிர்காலத்தை பற்றி யோசிப்பது மிகவும் முக்கியமானது. தோனி கேப்டனாக இருக்கும்போது, வருங்காலத்தைப் பற்றி யோசித்தார். ஆஸ்திரேலியாவில் வைத்து தோனி என்ன சொன்னார் என்பது நான் உங்களுக்கு நியாபகப் படுத்துகிறேன். அவர் நான், சச்சின், சேவாக் ஆகியோர் ‘சிபி சீரியஸ்’ தொடரில் இணைந்து விளையாட முடியாது. மைதானங்கள் பெரியதாக இருப்பதால் பீல்டிங் செய்ய இயலாது என்று கூறினார். அவர் 2019 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் எங்கள் மூவருக்கும் பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தயாராகி வருகிறார் என்பதை வெளிப்படுத்தத்தான் அவ்வாறு கூறினார். எமோசனல் ஆவதை விட செய்முறை முடிவுகளை எடுப்பது அவசியம்.தற்போது இளம் வீரர்கள் வளர வேண்டிய நேரம். ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் அல்லது மற்ற விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். யார் மீது நீங்கள் நம்பிக்கை வைத்துள்ளீர்களோ? அவர்களை விக்கெட் கீப்பராக உருவாக்க வேண்டும். ஒருவரை தேர்வு செய்து ஒன்றரை ஆண்டுகள் வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். ஒருவேளை அவர் சரியாக விளையாடவில்லை என்றால், அடுத்த நபரை தேர்வு செய்யலாம். அப்டி செய்தால் அடுத்த உலகக்கோப்பைக்கான ஒரு விக்கெட் கீப்பரை கண்டுபிடித்து விடலாம்’’ என்றார்.